2025 மே 21, புதன்கிழமை

'மு.கா. வின் மாநாட்டை பகிஷ்கரிப்பதன் மூலம் சாய்ந்தமருக்கான பிரதேச சபையைப் பெறமுடியும்'

Suganthini Ratnam   / 2016 மார்ச் 10 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி சபை வேண்டுமெனக் கோரும் அவ்வூர் மக்கள், பாலமுனைப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாநாட்டை எதிர்த்து அதற்குச் செல்லாமல் இருப்பதற்கும் அம்மாநாட்டுக்கு அவ்வூர் அரசியல்வாதிகள் செல்லாமல் தடைசெய்வதற்கும் அம்மக்களுக்கு துணிவு வருமாயின், நிச்சயமாக சாய்ந்தமருக்கான பிரதேச சபையைப் பெற முடியுமென உலமா கட்சித் தலைவர் கலாநிதி முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் புதன்கிழமை (09) விடுத்துள்ள அறிக்கையில், 'சாய்ந்தமருது மக்களுக்கு தனிப் பிரதேச சபை தேவையென்று அம்மக்களில் பெரும்பாலானோர் விரும்பினால், அதனை வழங்க வேண்டுமென்று முதலில் ஆதரவு தெரிவித்த ஒரே முஸ்லிம் கட்சி உலமாக் கட்சியாகும்.

2010ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட நாம், எமது கட்சிக்கு சாய்ந்தமருது மக்களின் பெரும்பான்மையான வாக்குகள் கிடைத்தால் இதற்கான அரசியல் போராட்டத்தை நாம் முன்னெடுக்க எமக்கு ஆணை வழங்கப்பட்டதாக அமையுமென்பதுடன், இது சாய்ந்தமருது மக்களின்
ஜனநாயக ரீதியான தமது கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பதாக அரசாங்கம் ஏற்குமென்று எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் நாம் தெரிவித்திருந்தோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'சாய்ந்தமருது மக்கள் வழமை போன்று முஸ்லிம் காங்கிரஸின் ஏமாற்றுக்கு ஆளாகியுள்ளனர். சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை தேவை என்றால், அவ்வூர் மக்கள் ஜனநாயக ரீதியில் தமது கருத்தை தெளிவுபடுத்த தேர்தலைப் பயன்படுத்த முன்வர வேண்டும். அதைத்; தவறவிட்டு ஊடகங்களில் புலம்புவதால் பெரிதாக ஏதும் நடக்காது'

தற்போது இதற்கான அழுத்தம் கொடுக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. அரச உயர்மட்டம் கலந்துகொள்ளவுள்ள மு.கா. வின் மாநாட்டை சாய்ந்தமருது மக்கள் பகிஷ்கரிப்பதுடன், தமதூர் அரசியல்வாதிகளும் அம்மாநாட்டுக்குச் செல்லாமல் ஜனநாயக ரீதியில் தடுக்க முடிந்தால் அது அவ்வூர் மக்களின்  தேவையை வலியுறுத்திக் காட்டியதாக அமையும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0

  • musthakeem Friday, 11 March 2016 10:12 AM

    sivatha thuppikki enna nadanda

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .