2025 மே 03, சனிக்கிழமை

முதலாம் கட்ட கற்பித்தல் பயிற்சி

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 25 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலையின் 2016 -2017ஆம் ஆண்டு பயிலுநர்களுக்கான முதலாம் கட்ட கற்பித்தல் பயிற்சி எதிர்வரும் 30ஆம் திகதி முதல் பெப்ரவரி 20ஆம் திகதிவரை நடைபெறவுள்ளதாக அக்கலாசாலையின் அதிபர் ஏ.சி.ஏம்.சுபைர் தெரிவித்தார்.

விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம்;, இஸ்லாம், ஆரம்பக்கல்வி, உடற்கல்வி ஆகிய பாடங்களில் பயிற்சி பெறும் 322 பயிலுநர்கள் கல்முனை, சம்மாந்துறை, திருக்கோவில், அக்கரைப்பற்று ஆகிய கல்வி வலயங்களிலுள்ள 46 பாடசாலைகளுக்கு பயிற்சிக்காக அனுப்பப்படவுள்ளனர்.

இவர்களின் கற்பித்தல் பயிற்சியை மேற்பார்வை செய்து, தேவையான நெறிப்படுத்தலை மேற்கொள்ள கலாசாலையின் முழுநேர மற்றும் வருகைதரு விரிவுரையாளர்கள் ஈடுபடவுள்ளதாகவும் அவர் கூறினார்.

பயிற்சிக்காக வருகைதரும் பயிலுனர்களுக்கு உரிய பாடசாலைகளின் அதிபர்களும் தொழில் வழிப்படுத்துனராகச் செயற்படவிருக்கும் சிரேஷ்;ட ஆசிரியர்களும் தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்கி, சிறந்த பயிற்சி பெற உதவுவார்கள் என தாம் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X