2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

2 மில்லியன் ரூபாய் செலவில் வீதி அபிவிருத்தி பணிகள்

Gavitha   / 2015 செப்டெம்பர் 20 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பைஷல் இஸ்மாயில்

நிந்தவூர், மஹ்மூத் மகளிர் கல்லூரி வீதியின் குறுக்கு வீதி, கடந்த 30 வருடகாலமாக அபிவிருத்தி செய்யப்படாதிருந்த நிலையில், குறித்த  வீதியை ரூபா 2 மில்லியன் ரூபாய் செலவில் செப்பனிடும் அபிவிருத்திப் பணிகளை, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீனின் மேற்கொண்டுள்ளார்.

இவ்வீதியின் அபிவிருத்திப் பணிகள் யாவும், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் ஒக்டோபர் மாத முற்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கடந்த மூன்று தசாப்த காலமாக குன்றும் குழியும் காணப்படும் இவ்வீதியால், மாணவர்களும்  ஆசிரியர்களும், பாதசாரிகளும், வாகன சாரதிகளும் பயன்படுத்தி வருவதுடன் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

நிந்தவூர் பிரதேசத்தில், பல ஆண்டுகாலமாக அரசியல் அதிகாரத்திலிருந்த எந்தவொரு அரசியல் வாதியும் இவ்வீதியை அபிவிருத்தி செய்ய எந்தவொரு நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.

இதன் காரணமாக, பிரதேச மக்கள் ஒன்றிணைந்து வீதியின் அபிவிருத்த பணிகள் குறித்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதினின் கவனத்துக்கு கொண்டு வந்தனர். இதனை மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலாபதியின் கவனத்துக்கு கொண்டு வந்ததன் விளைவாகவே இந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X