Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 28 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
பல்லினச் சமூகங்கள் வாழ்ந்துவரும் இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் மொழி, கலாசாரம், பாரம்பரியம் என்பவற்றில் கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் தோன்றலாம்.
ஒவ்வொரு இனத்தவரும் மற்றையவர்களின் கலை, கலாசாரம், மொழியைக் கற்றறிவதுடன் ஒரு சமூகத்தினர் மற்றைய சமூகத்தினரின் கலை, கலாசார நிகழ்வுகளையும் கண்டறிந்து கொள்வதன் மூலம் இனங்களுக்கிடையிலான நல்லுறவையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்த முடியும் என தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
அம்பாறை, காரைதீவு கனகரத்தினம் மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற சமூக நல்லுறவுக்கான கலை பண்பாட்டுத் திருவிழாவின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
கலைகள் மனித வாழ்க்கையில் பாரிய மாற்றங்களையும் வெற்றிகளையும் ஏற்படுத்தியுள்ளதை நாம் அறிய முடியும். அந்த வகையில் ஜாதி, மத, இன வேறுபாடுகள் பார்க்காது நல்லவற்றை தேடி கற்றுக்கொள்வதுடன் திறமைகளைப் பாராட்டி மனமகிழும் பழக்கத்தை நாம் ஏற்படுத்த வேண்டும்' என்றார்.
42 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
53 minute ago