Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 மே 01 , மு.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
இன வேறுபாடுகளை மறந்து ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து மூவின மக்களும் நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கியுள்ளனர். இந்த ஆட்சி மாற்றத்தில் சிறுபான்மை இனங்களின் பங்கு அதிகம். இதனைக்; கருத்திற்கொண்டு சிறுபான்மை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த அரசாங்கம் செயற்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்; தராகி தர்மரத்தினம் சிவராமின்; 11ஆவது நினைவுதினம், ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் சனிக்கிழமை (30) மாலை நடைபெற்றது. இங்கு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'தொடர்ந்தும் சிறுபான்;மை இனங்கள் அச்ச உணர்வுடன் வாழக்கூடாது. இதற்கான சூழ்நிலையை அரசாங்கம் முன்னெடுத்து தமிழ் மக்களின் மனங்களில் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.
'இதனை விடுத்து கடந்த அடக்குமுறை ஆட்சியில் நடந்தது போன்று இந்த ஆட்சியிலும் இடம்பெற இடமளிக்க முடியாது' என்றார்.
'கடந்தகால அடக்குமுறை ஆட்சியாளர்கள் போன்று தற்போதைய நல்லாட்சி அரசாங்கம்; செயற்படக் கூடாது. தமிழர்கள் தங்களின் நிகழ்வுகளை ஏனைய இன மக்களைப் போன்று சுதந்திரமாக கொண்டாட வேண்டும்' எனவும் அவர் மேலும் கூறினார்.
15 minute ago
36 minute ago
45 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
36 minute ago
45 minute ago
45 minute ago