Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2015 நவம்பர் 02 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் மௌலானா
முஸ்லிம் மக்களின் அதிகபட்ச ஆதரவுடன் ஆட்சிபீடம் ஏறிய நல்லாட்சி அரசாங்கமானது முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் வகையில் செயற்படுவதாகத் தெரியவில்லையென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் அமைப்பாளர் அன்வர் நௌஷாத் தெரிவித்தார்.
இது தொடர்பில் இன்று திங்கட்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில், 'மக்களின் அன்றாட வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்புவதனூடாக இன, மத ரீதியான அபிலாஷைகள் நிறைவேற்றப்படுமென்ற நம்பிக்கையில்; தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. அதிலும், சிறுபான்மை மக்களின் தெரிவாக இந்த அரசாங்கம் உள்ளது. இந்நிலையில் முஸ்லிம்களுக்கு நமபிக்கையூட்டக்கூடிய செயற்பாடுகள் மிகக் குறைந்தளவில் உள்ளன' என்றார்.
குறிப்பாக, ஐக்கிய நாடுகளின் பரிந்துரைகளை எமது நாட்டின் இறைமையை மீறாதவாறு செயற்படுத்துவதற்கான இராஜதந்திர நடவடிக்கையில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டமை மனவேதனைக்குரிய விடயம். பிரதம மந்திரி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்; இவ்விடயத்தில் ஒரே போக்கைக் கொண்டிருப்பதாகவே தோன்றுகின்றது. முஸ்லிம்களை ஒரு அப்பாற்பட்ட பிரஜைகளாக கொண்ட ஒப்பந்தங்கள் இலங்கையின் இனப்பிரச்சினை வரலாற்றில் தோல்வியடைந்தமை வரலாற்று உண்மை.
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ஏற்கனவே உள்நாட்டுப் போராளிகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் முஸ்லிம்களை புறக்கணித்தே நடந்துள்ளது. இந்தப் பயத்தோடு நாம் நல்லாட்சி அரசை நோக்க வேண்டியுள்ளது. உள்நாட்டுப் போரின்போது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் அவர்களின் மீள்குடியிருப்பு, அதிகார அலகுகள் மற்றும் வாழ்வாதாரம் பற்றிய தெளிவான வரைவுகள் இன்றிய ஜெனீவா அறிக்கையானது நிரந்தர தீர்வுக்கான வழிமுறைகளல்ல என்பதுவும் தெளிவான உண்மையாகும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
2 hours ago
6 hours ago