Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2017 பெப்ரவரி 16 , மு.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
பொத்துவில் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ஊறணி, கனகர் கிராமத்தில் 30 வருடங்களின் பின்னர் மீள்குடியேற்றத்துக்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அக்கிராமத்தில் யுத்த காலத்தின்போது இடம்பெயர்ந்த பொதுமக்களின் காணிகளை வனவள இலாகாவுக்குச் சொந்தமானது என்று அதன் அதிகாரிகள் அடையாளப்படுத்தியிருந்ததுடன்;, இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
தங்களின் மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்குமாறு அக்கிராம மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்திருந்தனர்.
இந்நிலையில், பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.எம்.முசாரத் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் வனவள அதிகாரிகள் உள்ளிட்டோரைக் கொண்ட குழுவினர் அக்கிராமத்துக்கு புதன்கிழமை (15) சென்று பார்வையிட்டதுடன், மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாகவும் ஆராய்ந்தனர்.
இக்கிராம மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் காணி உரிமையாளர்களை அடையாளம் காண்பதற்கான நேர்முகப் பரீட்சை பொத்துவில் பிரதேச செயலகத்தில் அண்மையில் நடைபெற்றதாக அப்பிரதேச செயலாளர் கூறினார்.
இந்நிலையில், இக்கிராமத்தில் வசித்துவந்த பொதுமக்கள் அடையாளம் காணப்பட்டதுடன், வன இலாகாவின் உதவியுடன் 30 பேருக்கு 2,400 பேர்ச் மற்றும் பொதுத் தேவைகளுக்கான காணிகளை முதற்கட்டமாக விடுவிப்பதாக அம்பாறை மாவட்ட வனவள அதிகாரி ஒருவர் உறுதி அளித்துள்ளதாக பொத்துவில் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
எனவே, இக்கிராம மக்களின் விரைவில் காணிகள் ஒப்படைக்கப்படவுள்ளதுடன், அமைச்சர்களான சஜித் பிரேமதாஸா, டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் வீடுகளை நிர்மாணித்துத் தருவதற்கு உறுதி அளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
8 hours ago