Suganthini Ratnam / 2017 ஏப்ரல் 19 , மு.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.சி. அன்சார்
சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில் மாடிக் கட்டடம் அமைக்கப்படுவதைக் கண்டித்து அவ்வித்தியாலய மாணவர்கள், இன்று (19) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வித்தியாலயத்தில் வகுப்பறைகளுக்கான பற்றாக்குறை காணப்படும் நிலையில், அதை நிவர்த்தி செய்வதற்காக விளையாட்டு மைதானத்தில் இரண்டு மாடிக் கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில், அண்மையில் இதற்கான அடிக்கல் நடப்பட்டு, பூர்வாங்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும், விளையாட்டு மைதானத்தில் மாடிக் கட்டடம் அமைப்பதன் மூலம் தங்களின் விளையாட்டுத் திறமை மழுங்கடிக்கப்படும் எனத் தெரிவித்த மாணவர்கள், அக்கட்டடத்தை வேறிடத்தில் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்தனர்.
4 minute ago
15 minute ago
22 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
15 minute ago
22 minute ago
41 minute ago