Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஓகஸ்ட் 13 , மு.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா, எம்.எஸ்.எம். ஹனீபா
உறுகாமத்தில் சுமார் 78 தமிழ் குடும்பங்களையும் 148 முஸ்லிம் குடும்பங்களையும் உள்ளடக்கியதாக 226 குடும்பங்களை சேர்ந்த மக்கள் இன வேறுபாடுகள் இன்றி 1990ஆம் ஆண்டுக்கு முன்னர் மிகவும் ஐக்கியமாக வாழ்ந்து வந்தனர் இந்நிலையில், பயங்கரவாதிகளின் தாக்குதலினால் இடம்பெயர்ந்து, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலமுனை ஹுஸைனியா நகர் மீள் குடியேற்ற கிராமத்தில் 135 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றது என உறுகாமத்தைச் சேர்ந்த சேகு முஹம்மது உமர் ஜமாலி (வயது-34) என்பவர் தெரிவித்தார்.
நல்லிணக்கப் பொறிமுறைக்கு அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச பொதுமக்களிடம் கருத்தறியும் அமர்வு அட்டாளைச்சேனை லொயிட்ஸ் வரவேற்பு மண்டபத்தில் இன்று (13) சனிக்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
இந்த மக்களின் அகதி வாழ்க்கை தொடர்ந்து பல வருடங்களாக அமைந்திருந்தமையினால் மீண்டும் மீண்டும் நிம்மதி, சந்தோஷங்களை எல்லாம் இழந்து சொல்லொண்ணாத் துன்பங்களையும் துயரங்களையும் சந்தித்து வாழ்ந்த வரலாறுகள் இந்த மக்களின் இருள் படிந்த வாழ்க்கையாக அவை அமையப் பெற்றிருந்தன.
பாலமுனை ஹுஸைனியா நகர் மீள் குடியேற்ற கிராமத்தில் சுமார் 135 குடும்பங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இவர்களின் வீடமைப்பு பணிக்காக 25 ஆயிரம் ரூபாய் பணமும், 13 பேர்ச் காணித் துண்டுத் வழங்கப்பட்டதுடன், அரசாங்கத்தின் பணிகள் நிறைவடைந்து விட்டன. இன்று இக் கிராமத்தில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழந்து வருகின்றன.
இன்று வரை அந்த மக்கள் தமது ஜீவனோயபாவத்துக்கு வழியின்றி மிகவும் கஷ்டப்பட்டு தமது வாழ்வைக் கொண்டு செல்கின்றனர்.
எங்களது விவசாயக் காணிகள் தமிழர்களினால் பலவந்தமாக அபகரிக்கப்பட்டுள்ளது. தற்போது குடியிருப்பு நிலங்களில் அவர்கள் குடியிருக்கின்றார்கள். முஸ்லிம்களின் காணிகளுக்கான ஒப்பங்கள் தமிழர்களின் பேர்களுக்கு புதிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளான எமக்கு மாற்றுக்காணிகளை வழங்குங்கள். இழந்த சொத்து செல்வங்களுக்கான நஷ்டஈடுகளை பெற்றுத் தாருங்கள். வீடமைப்பு வசதிகளை பெற்றுத் தாருங்கள் சகல வசதி வாய்ப்புகளும் கூடிய ஒரு கிராமம் ஒன்றை உருவாக்கித் தாருங்கள் என்றார்.
27 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
2 hours ago
3 hours ago