Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 செப்டெம்பர் 03 , மு.ப. 08:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் முயற்சியினால் அரசாங்கத்தின் 100 நாட்கள் அபிவிருத்தி வேலைத்திட்டதின் கீழ் கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட கல்முனை, மருதமுனை மற்றும் நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களின் அபிவிருத்திக்கென 29 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் ஏ.எம்.தௌபீக் தெரிவித்தார்.
இது குறித்து இன்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தல் காலத்தில் மேற்படி பிரதேசங்களுக்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினரிடம் மக்கள் தங்களது பிரதேச வீதிகள் மற்றும் வடிகான்களை அபிவிருத்தி செய்து தருமாறு கேட்டு கொண்டதற்கிணங்க மேற்படி நிதியைக் கொண்டு இந்த அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
கல்முனை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 29 கிராம சேவகர் பிரிவுகளுக்கும் தலா 1 மில்லியன் ரூபாய் வீதம் 29 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இவ்வேலைத்திட்டங்களில் சில ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய வேலைத்திட்டங்களை மிக விரைவில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும அவர் மேலும் தெரிவித்தார்.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago