2025 ஜூன் 09, திங்கட்கிழமை

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் 26இல்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 17 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் எதிர்வரும் 26ஆம் திகதி காலை 10.00 மணிக்கு அம்பாறை மாவட்ட செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர்களான அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர ஆகியோரின் தலைமையில் இந்த அபிவிருத்திக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதில் அமைச்சர்கள்,  கிழக்கு மாகாண ஆளுநர், திகாமடுல்ல நாடாளுன்ற உறுப்பினர்கள்,  கிழக்கு மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள், அரசாங்க அதிபர், உள்ளூராட்சிமன்றங்களின் தலைவர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் ஆகியோர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .