2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 5 பேர் கைது

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 28 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றுவந்ததாகக் கூறப்படும்  5 பேரை கைதுசெய்துள்ளதாக தமண பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை மின்சார சபையினரும் தமண பொலிஸாரும் இணைந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) இரவு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றுவந்ததாகக் கூறப்படும் 5 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

தமண, இறக்காமம், இங்குராணை ஆகிய பிரதேசங்களிலேயே இந்தச்; சோதனை மேற்கொள்ளப்பட்டன.

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றுக்கொள்வதற்காக பயன்படுத்திய மின்சார வயர்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர்களை இன்று திங்கட்கிழமை அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .