2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

கூலி : டிக்கெட் முன்பதிவில் மட்டும் 50 கோடி வசூல்

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 10 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் அமீர்கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது.

படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் அமெரிக்கா மற்றும் ஓவர்சீஸ் நாடுகளில் தொடங்கி அதிரடி புக்கிங்ஸ் நடந்து வருகிறது. படத்தின் பிரீமியர் ஷோவிற்கு வட அமெரிக்கா நாட்டில் 50,000-க்கு மேற்பட்ட டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கேரளம் மற்றும் வட இந்தியாவில் டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கி வேகமாக நடைப்பெற்று வருகிறது. முதல் மூன்று நாட்களுக்கு அனைத்து ஷோக்களும் ஹவுஸ் ஃபுல் ஆகியுள்ளது. படத்தின் மீது ரசிகர்களுக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் படத்தின் முன்பதிவுகளில் மட்டும் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X