Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 ஏப்ரல் 10 , மு.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
விநாயகபுரம் கிராம வீதி, தம்பிலுவில் மகாவித்தியாலய முன் வீதி, பொது சந்தை முன் வீதி, நூலக வீதி, மகாவித்தியாலய 2ஆம் குறுக்கு வீதி, தாண்டியடி வீதிகள் போன்ற 6 வீதிகளை கொங்கீட் வீதிகளாக புனரமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வுகள் நேற்று சனிக்கிழமை காலை நடைபெற்றது.
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி பொத்துவில் தொகுதி அமைப்பாளரும் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவருமான க.ரகுபதியின் வேண்டுகோளுக்கினங்க உணவு மற்றும் போஷக்கு அமைச்சர் பி.தயாரட்ன தனது பன்முக வரவுசெலவு நிதி ஓதுக்கீட்டின் மூலம் ஒரு கோடியே 6 இலட்சம் ரூபா
செலவில் இவ் வீதிகள் புனரமைக்கப்படவுள்ளன.
இந்நிகழ்வில், அமைச்சரின் இணைப்பு செயலாளர் சுனில் சந்திரலால், பொத்துவில் தொகுதி அமைப்பாளரும் ஆலையடி வேம்பு பிரதேச சபையின் எதிர்கட்சி தலைவருமான க.ரகுபதி ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு வீதி புனர்நிர்மான வேலைகளை ஆரம்பித்து வைத்தனர்.
14 minute ago
30 minute ago
35 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
30 minute ago
35 minute ago
1 hours ago