2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கூலி ரிவ்யூ ; தரமான சம்பவம் செய்த லோகேஷ்

Janu   / 2025 ஓகஸ்ட் 14 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படமான 'Coolie' படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி உள்ளது. படத்திற்கு பல இடங்களில் இருந்தும் பாசிட்டிவ் ரிவ்யூக்கள் வர தொடங்கி உள்ளன.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள திரைப்படமான 'கூலி (Coolie)', சர்வதேச அளவில் வெளியான நிலையில் படத்தின் ரிவ்யூக்கள் வெளியாக தொடங்கி உள்ளன. தமிழ்நாடு வெளியீட்டிற்கு முன்னதாகவே வெளிநாடுகளில் திரையிடப்பட்டது. ஆகஸ்ட் 14, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாகும் நிலையில், வெளிநாடுகளில் இதன் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன. கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

வட அமெரிக்காவில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு (இந்திய நேரம் ஆகஸ்ட் 14 அதிகாலை 4 மணி) முதல் பொது நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கும், கேரளாவில் காலை 6 மணிக்கும் சிறப்பு காட்சிகள் திரையிடப்படவுள்ளன. மற்ற மாநிலங்களில் உள்ளூர் விநியோக அட்டவணையின்படி வெளியீட்டு நேரம் மாறுபடும்.

வெளிநாடுகளில் திரையிடப்பட்டதைத் தொடர்ந்து, திரைப்படம் பார்த்த பார்வையாளர்கள் தங்கள் முதல் கருத்துக்களை சமூக வலைதளங்களில், குறிப்பாக X (முன்பு ட்விட்டர்) தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். கூலி திரைப்படம் ரஜினிகாந்தின் வசீகரிக்கும் நடிப்பை வெளிப்படுத்துவதாகவும், லோகேஷ் கனகராஜ் விறுவிறுப்பான அதிரடி காட்சிகளுடன் வலுவான உணர்வுபூர்வமான கதையை உருவாக்கியுள்ளதாகவும் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

ரசிகர்கள் Coolie படம் சிறப்பாக உள்ளது. Coolie இண்டர்வல் திருப்பம் சிறப்பாக உள்ளது. இந்த படத்தின் இண்டர்வல் லோகி எடுத்த படங்களிலேயே சிறந்த இண்டர்வல் என்று கூறப்பட்டு உள்ளது. முதல் பாதி கொஞ்சம் மெதுவாக சென்றாலும்.. இன்டர்வலுக்கு முன்பே படம் வேகம் எடுக்கிறது. அதன்பின் வேகம் கடைசி வரை சிறப்பாக உள்ளது. கிளைமேக்ஸ் சிறப்பாக உள்ளது என்றுள்ளனர்.

அழகான காட்சிகள் மற்றும் அனிருத்தின் துடிப்பான இசை படத்தின் அனுபவத்தை மேம்படுத்துகின்றன. ரஜினிகாந்தின் பிரம்மாண்டமான தோற்றமும், பிரமிக்க வைக்கும் ஸ்டண்ட் காட்சிகளும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. இந்தத் திரைப்படம் 5க்கு 4 மதிப்பெண்களுடன் ஒரு சிறந்த பொழுதுபோக்கு படமாக கருதப்படுகிறது என்று படம் பார்த்தவர்கள் ரிவ்யூ சொல்ல தொடங்கி உள்ளனர்.

Coolie படத்தின் முதல் 30 நிமிடங்களில் போடப்படும் ரஜினிகாந்திற்கான புதிய மற்றும் சிறந்த டைட்டில் கார்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. அனிருத்தின் பின்னணி இசை சிறப்பாக அமைந்துள்ளது. ரஜினியின் அறிமுகம் எளிமையாக இருந்தாலும், அவரது கண்களும், திரையில் அவரது இருப்பும் ரசிகர்களை கவர்ந்துள்ளன. 'சிக்கிட்டு' பாடல் படமாக்கப்பட்ட விதம் அழகாக உள்ளது. நாகார்ஜுனாவின் சைமன் கதாபாத்திர அறிமுகமும் நன்றாக உள்ளது.

கடைசி வரை வேகமாக செல்கிறது. படத்தின் சில காட்சிகள் மட்டும் ஓகே ரகம். ஆனாலும் கண்டிப்பாக படம் மாஸ் என்டர்டெயினர். முக்கியமாக தமிழில் பெரிய கமர்ஷியல் ஹிட் படமாக இருக்கும். இண்டர்வல் சிறப்பாக உள்ளது. ஜெயிலர் படத்தில் ரஜினி ஆக்சன் செய்யாமல் மற்ற டாப் ஹீரோக்களை ஆக்சன் செய்ய வைத்திருப்பார். ஆனால் இந்த படத்தில் அப்படி இல்லாமல் ரஜினியே நேரடியாக ஆக்சன் செய்வது சிறப்பாக உள்ளது. அதிலும் ரஜினி பேசும் சிங்கிள் ஷாட் டயலாக் படத்தில் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

மோனிகா பாடலுக்கு மொத்த தியேட்டரும் தீயாக இருக்கிறது. பாடல் வரக்கூடிய இடமும், வைக்கப்பட்ட விதமும் சிறப்பாக உள்ளது. ரஜினியை கொண்டாடும் படமாக இருந்தாலும் படத்தில் கதை உள்ளது. அதோடு படத்தில் மிக முக்கியமான சர்ப்ரைஸ் உள்ளது என்றும் ரிவ்யூ செய்துள்ளனர்.

கேரளா ரசிகர்கள் சிலர் இந்த படம் பிளாக்பஸ்டர். இதுதான் படம். நாங்கள் தீவிர ரசிகர்கள். எங்களுக்கு படம் பிடித்துள்ளது. எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் படம் எடுத்துள்ளனர். விக்ரமிற்கு பிறகு எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் ரஜினிக்காக இந்த முறை லோகி படம் எடுத்துள்ளார் என்றுள்ளனர். அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் நிச்சயமாக திருப்திப்படுத்தும் ஒரு மேட்னஸ் மாஸ் என்டர்டெய்னர். எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் படம் எடுத்துள்ளனர், என்று கமெண்ட் செய்துள்ளனர்.

ரஜினிகாந்த், நாகார்ஜுனா, அமீர்கான் ஆகியோரின் நடிப்பை பலரும் பாராட்டியுள்ளனர். நாகார்ஜுனாவின் வில்லத்தனமான கதாபாத்திரம் படத்தின் முதுகெலும்பாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அனிருத் ரவிச்சந்தரின் அதிரடி இசை படத்தின் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. 'கூலி' திரைப்படம் 1000 கோடி வசூலிக்கும் முதல் கோலிவுட் திரைப்படமாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .