Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 ஓகஸ்ட் 14 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
12 வயது சிறுமிக்கு மதுபானம் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த, அவரது தாய் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட கணவர் (சித்தப்பா) கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மொனராகலை, கோனகம் ஆர பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சிறுமியின் தாய் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு வெளிநாடு சென்றுள்ளதுடன் சிறுமியை அவரது சித்தப்பா (தாயின் இரண்டாவது திருமண கணவர்) மற்றும் பாட்டி கவனித்துக் கொண்டுள்ளனர்.
இந்த ஆண்டு ஜனவரி முதல், சந்தேக நபரான சித்தப்பா அவ்வப்போது தனது இடுப்பை தொடுமாறு சிறுமியிடம் கூறி சிறுமியை தொட்டு பாலியல் சேஷ்டை புரிந்துள்ளார். சந்தேக நபர் கூறியபடி செய்யாவிடின்,சிறுமியை அடித்து சித்திரவதை செய்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் ஒரு நாள், பாட்டி பிபில பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அன்று சிறுமி பாடசாலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்த போது சந்தேக நபர் சிறுமியை அறைக்குள் அழைத்துச் சென்று மதுபானம் கொடுத்து குடிக்க வற்புறுத்தி போதையில் மயக்கமடைந்த பின்னர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அதற்கு பின்னரும் பல முறை சிறுமி பாடசாலை முடிந்து வீடு திரும்பிய போது சிறுமியை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் 32 வயதுடைய சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுமனசிறி குணதிலக
21 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago