2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பாகிஸ்தானின் 79வது சுதந்திர தினம்

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 14 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் நாட்டின் 79 வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 14 ஆம் திகதி ஆகும் இதனை முன்னிட்டு வியாழக்கிழமை (14) அன்று காலை கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) பகீம் அல் அஸீஸ் தலைமையில் பாகிஸ்தான் தேசியக் கொடி ஏற்றி வைக்கும் வைபவம் நடைபெற்றது. 

பிரதி சபாநாயகர் டாக்டர் றிஸ்வி சாலி, உயர் நீதிமன்ற நீதியரசர் எம்.ரீ.எம் நவாஸ், முன்னாள் ஆளுநர் அசாத் சாலி முன்னாள் உயர்ஸ்தானிகர் சட்டத்தரணி என்.எம். சஹீட் உட்பட பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்

பாகிஸ்தான் முதல் செயலாளர் பாகிஸ்தான் ஜனாதிபதி . பிரதமர் சுதந்திர செய்திகளை வாசித்தார் அத்துடன் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் ஓய்வு பகீம் அல் அசீஸ் அவர்கள் இலங்கை பாகிஸ்தான் நட்புறவு ராணுவ, கல்வி புலமைப்பரிசில்கள் ஏற்றுமதி, இறக்குமதி துறையில் இலங்கையின் கடந்த 8 தசாப்த காலங்கள் இணைந்து செயற்படுவதாகவும் மற்றும் இந்தியா காஷ்மீர் பிரச்சினை சார்பாக இந்தியா ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாகவும் காஷ்மீர் பிரச்சினை நீண்ட காலப் பிரச்சினையாக நிலவி வருவதாகவும் இந்தியா அண்மையில் பாகிஸ்தான் தாக்குதல் மேற்கொண்டதாகவும் உரையாற்றினார்.

அஷ்ரப் ஏ சமத்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .