Editorial / 2019 டிசெம்பர் 11 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

சகா
அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தால் கூடுதலாகப் பாதிக்கப்பட்ட காரைதீவு மக்களுக்கு இதுவரை எந்த உதவியும் வழங்கப்படவில்லையென, காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கே.ஜெயசிறில், அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.றியாசிடம் முறையிட்டுள்ளார்.
அந்த மக்களுக்குத் தேவையான உதவிகளை, சமைத்தஉணவை, உலருணவை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும், அவர் கேட்டுள்ளார்.
நேற்றைய (11) மழையுடன் வெள்ள நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாகவும் பெருவாரியான வீடுகளில் வெள்ளம் ஏறியுள்ளதாகவும் தெரிவித்த அவர், “அன்றாடக்கூலித் தொழிலாளிகளின் நிலைமை பரிதாபத்துக்குரியதாகவுள்ளது. கடந்த 18 நாள்களாக தொழிலுக்குச் செல்லமுடியாமல் வௌ்ளத்திலேயே அவர்கள் மூழ்கியுள்ளனர்” என்றார்.
“அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தேவையான உதவிகளை வழங்குமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், இதுவரை எதுவித உதவியும் வழங்கப்படவில்லையென்பது வேதனையாகவுள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.
காரைதீவு 11, 12 ஆகியன மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன எனச் சுட்டிக்காட்டிய அவர், பாதிக்கப்பட்ட காரைதீவு மக்களுக்கு மனிதாபிமான ரீதியில் உதவ அனைவரும் முன்வர வேண்டுமென்றார்.
23 Jan 2026
23 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Jan 2026
23 Jan 2026