2021 மே 08, சனிக்கிழமை

சேனைக்குடியிருப்பு ஆற்றில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 14 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

(க.சரவணன், வி.ரி.சகாதேவராஜா, எல்.அதிரன்)

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனைகுடியிருப்பை சேர்ந்த குடும்பஸ்த்தர் கிட்டங்கி ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று வியாழக்கிழமை காலை துறைநீலாவணையை சேர்ந்தவரும் சேனைக்குடியிருப்பில் வசிப்பவருமான கோவிந்தபிள்ளை குணசேகரம் (50 வயது) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட சடலம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பிலான விசாரணையை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X