Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 25 , மு.ப. 08:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியரொருவர் பொதுமக்களுடன் முறையற்ற ரீதியில் நடந்து கொண்டமை தொடர்பில் விசாரணை செய்து அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் பறூஸா நக்பருக்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம்.எஸ்.எம்.இப்றாலெப்பை பணிப்புரை விடுத்துள்ளார்.
அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பறூஸா நக்பருக்கு கடந்த 15ஆம் திகதியிட்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதமொன்றிலேயே மேற்படி பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரம் வருமாறு :-
அட்டாளைச்சேனை வைத்தியசாலை வைத்தியர் பொதுமக்களுடன் முறையற்ற வகையில் நடந்து கொண்டதாக, குறிப்பிட்ட பொதுமக்களால் தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்து, அவ்விடயம் தொடர்பில் அறிக்கையொன்றை சமர்பிக்கவும் என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி விசாரணைக் குழுவுக்கு அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் பறூஸா நக்பர் தலைவராகவும், முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.பி. சாலித் அங்கத்தவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியருக்கு எதிராக, பொதுமக்கள் எழுத்து மூலமாகத் தெரிவித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணையொன்றினை நடத்துமாறு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு - கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ. அஸீஸ் பிறப்பித்த உத்தரவுக்கமைவாகவே இந்த விசாணையை நடத்துவற்குரிய நடவடிக்கையினை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேற்கொண்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மேற்படி கடிதத்தின் பிரதிகள், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் முறைப்பாடுகளைச் செய்த பொதுமக்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
16 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
51 minute ago