Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 26 , மு.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியின் காரைதீவுப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவர் காயமடைந்துள்ளார்.
துவிச்சக்கர வண்டியில் வந்த ஒருவர் திடீரென வீதியைக் கடக்க முற்பட்டபோது, பிரதான வீதியில் மோட்டர் சைக்கிளில் பயணித்த நபர் தடுமாற்றத்துக்கு உள்ளானதையடுத்து இந்த விபத்து இடம்பெற்றதாக நேரில் கண்டோர் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளானவர் சாய்ந்தமருதுப் பிரதேசத்தைச் சேர்ந்த பொறியியலாளர் ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர் பொதுமக்களின் உதவியுடன் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
சமீப காலமாக, கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியில் அடிக்கடி விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றன.
மேற்படி பிரதான வீதியானது, அகலமாக்கப்பட்டு அண்மையில் கார்ப்பட் வீதியாக மாற்றப்பட்டதையடுத்து இவ்வீதியில் வாகனங்கள் அதிக வேகத்துடன் பயணம் செய்வதே விபத்துக்கள் இடம்பெறுவதற்குப் பிரதான காரணமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
13 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
48 minute ago