2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

சுனாமியினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புலமைப்பரிசில்

Super User   / 2010 நவம்பர் 03 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எல்.ஏ.அஸீஸ்)

இலங்கை நிப்போன் கல்வி கலாசார நிலையம் ஒழுங்கு செய்த சுனாமியினால் பாதிக்கப்பட்ட வறுமையான குடும்ப மாணவர்களுக்கு மாதாந்த புலமைப்பரிசில் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்குதல் தொடர்பான கூட்டம் கல்முனை ஸ்ரீ சுபத்ராரம மகா விகாரை மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.

விகாரையின் பொறுப்பாளரும் நிப்போன் கல்வி கலாசார நிலையத்தின் கல்முனை பிராந்திய பொறுப்பாளருமான  ரன்முத்துக்கள சங்கரத்ன தேரோ தலைமையில் இடம் பெற்ற  இந்த நிகழ்வில் இலங்கை நிப்போன் கல்வி கலாசார நிலையத்தின் தலைமை அலுவலக பிரதிநிதிகளும் கலந்து கொண்டதுடன் புலமைப்பரிசில் பெறும் மாணவர்களும்  அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

இப்பிராந்தியத்திலுள்ள மூவின மாணவர்களும் இவ்வேலைத்திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .