Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 நவம்பர் 15 , மு.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
அக்கரைப்பற்று, அலங்குளம் பிரதேசத்தில் நேற்று இரவு 10.30 மணியளவில் விவசாயி ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. சென்றல் கொலேஜ் வீதி, அக்கரைப்பற்று 20ஐச் சேர்ந்த ஆதன் லெப்பை (வயது 55) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
வழமைப்போல் வயலுக்குப் புறப்பட்டுச் சென்ற இவர், மாலை வரை வீடு திரும்பாததால் குடும்பத்தினர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையிலேயே மேற்படி நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவரின் தலையின் பின்புறத்தில் பலத்த காயமொன்று இருப்பதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
பிரேத பரிசோதனைக்காக சடலம் தற்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
7 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
40 minute ago