2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

'ஹஜ் பெருநாள் சந்தோச நிகழ்வு'

Menaka Mookandi   / 2010 நவம்பர் 18 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

மருதமுனை அல் மதீனா வித்தியாலயத்தில் இன்று 'ஹஜ் பெருநாள் சந்தோச நிகழ்வு' ஒன்று இடம்பெற்றது.  பெருநாள் தினத்துக்கு மறுநாள் பாடசாலைகளில் மாணவர்கள் வரவு மிகவும் குறைவாகவே இருப்பதை தவிர்க்கும் வகையில், அல் மதீனா வித்தியாலயத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட மேற்படி 'ஹஜ் பெருநாள் சந்தோச நிகழ்வில்' நூறு வீதமான மாணவர் வரவு இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் பெருநாள் புத்தாடைகளுடன் இந்நிகழ்வில் கலந்து கொண்ட அதேவேளை, கணிசமான பெற்றோர்களும் தமது பிள்ளைகளோடு வருகை தந்திருந்தனர்.

மேற்படி, 'ஹஜ் பெருநாள் சந்தோச நிகழ்வின்' போது – அனைத்து மாணவர்களுக்கும் வித்தியாலய அதிபர் ஏ.ஆர். நிஃமதுல்லா இனிப்புகள் வழங்கி சந்தோசப்படுத்தினார். இதன்போது, மாணவர்கள் - ஆசிரியர்கள் பாடல் மற்றும் கலை நிகழ்ச்சிகளை வழங்கி நிகழ்வை மேலும் சந்தோசம்படுத்தினார்கள்.

மாணவர்களை பாடசாலை நோக்கி ஈர்க்கும் இவ்வாறான சிறந்த, நுட்பமான வழிமுறைகளை மேற்கொண்ட அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க நிருவாகிகளின் நடவடிக்கையினை தாம் பெரிதும் பாராட்டுவதாக அங்கு வருகை தந்த பெற்றோர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .