2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

சம்மாந்துறையில் கருகிய நிலையில் நெற்பயிர்கள்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 21 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை விவசாய விரிவாக்கல் பிரிவிற்குட்பட்ட பல பிரதேசங்களிலுள்ள பெரும்போக வேளாண்மை செய்கை பண்ணப்பட்டுள்ள வயல் காணிகளில்  நீரில்லாத காரணத்தினால் நெற்பயிர்கள் கருகி மஞ்சள் நிறமாகியுள்ளதுடன், இடையிடையே பயிர்கள் முளைத்தும் காணப்படுகின்றன.

விவசாயிகள் ஆறு மற்றும் நீரோடையிலிருந்து நீரைப் பெற்று  வயல்களுக்கு பாய்ச்சி வருகின்றனர்.

இதற்கிடையில்,  வயல்களில் களைகளின் பெருக்கமும் அதிகரித்துள்ளததால் களைநாசினி விசுறும் வேலைகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.

பயிர்களுக்கு பசளையிடவேண்டிய இக்கால கட்டத்தில், நீரில்லாத காரணத்தினால் உரிய நேரத்தில் நெற்பயிர்களுக்கு பசளையிட முடியாதுள்ளளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .