Super User / 2010 டிசெம்பர் 28 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார்)
திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறியாணி விஜேவிக்கிரமவின் அழைப்பினையேற்று நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இன்று செவ்வாய்க்கிழமை அம்பாறைக்கு விஜயம் செய்தார்.
அவர் அம்பாறை மாவட்டத்தின் தீகவாபி, உகன, தமன மற்றும் ஹிங்குரான ஆகிய பிரதேசங்களிலுள்ள குழாய் நீர் விநியோகத் திட்டங்களை வைபவரீதியாக திறந்து வைத்தார்.
அம்பாறை மாவட்டத்தில் ஜப்பானிய சர்வேச அபிவிருத்தி வங்கி (ஜெய்க்கா) வின் நிதி உதவியின் மூலம் செயற்படுத்தப்படவுள்ள மூன்றாம் கட்ட குழாய் நீர் வழங்கும் திட்டத்தினையும் ஆரம்பித்து வைத்தார்.
இத் திட்டத்திற்கென ஜப்பானிய சர்வேச அபிவிருத்தி வங்கி (ஜெய்க்கா) 16,500 மில்லியன் ரூபாவினை வழங்கியுள்ளது.
இம்மாவட்டத்தின் மத்திய முகாம், நாவிதன்வெளி, வட்டினாகல, பக்கியல, நாமல் ஓயா, பாணம, உகன, தமன, பதியத்தலாவ, தொட்டம ஆகிய சகல கிராமங்களுக்கும் மூன்று வருடங்களுக்குள் சுத்தமான குடிநீர் வழங்கப்படும். என தெரிவிக்கப்படுகின்றது.
28 minute ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
8 hours ago
9 hours ago