2025 ஒக்டோபர் 26, ஞாயிற்றுக்கிழமை

காணிப் பதிவகத்தின் கௌரவிப்பு நிகழ்வு

Super User   / 2011 ஜனவரி 02 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

கல்முனை மாவட்டக் காணிப் பதிவகத்தின் வருடாந்த ஒன்று கூடலும், உத்தியோகத்தர்கள் கௌரவிப்பும் இன்று ஞாயிற்றுக்கிழமை பதிவக அலுவலகத்தில் இடம்பெற்றது.

கல்முனை மாவட்டக் காணி பதிவாளரும், மேலதிக மாவட்டப் பதிவாளருமான எம்.ஏ. ஜமால் முகம்மது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சட்டத்தரணிகள், பிரசித்த நொத்தாரிசுகள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது, அலுவலகத்தில் கடமையாற்றிய ரி.விக்கிரமசிங்கம் ஓய்வுபெறுவதை முன்னிட்டு பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கபட்டதோடு, அவருக்கு வாழ்துப் பத்திரமும், அன்பளிப்புகளும் வழங்கி வைக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X