Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 02 , மு.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ், எம்.சி.அன்சார், ஹனீக் அஹமட்)
அம்பாறை மாவட்டத்தின் பெரும்பாலான பிரதேசங்களில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை முதல் பெய்து வரும் அடை மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு குடியிருப்புக்களிலும் நீர் புகுந்துள்ளது.
குடியிருப்புக்கள் வெள்ளநீர் புகுந்த குடும்பங்கள் தமது வீடுகளிலிருந்து வெளியேறி உறவினர்கள் வீடுகளுக்கு சென்ற வண்ணமுள்ளனர். மழை காரணமாக மக்கள் பல சுகாதார பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மற்றும் மக்கள் வங்கி போன்றவைகளின் சூழல்களும், ஏனைய சில வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு அருகாமையிலுள்ள களியோடை ஆறு பெருக்கெடுத்தோட ஆரம்பித்துள்ளது.
மேலும், பாலமுனை – திராய்க்கேணி பகுதியிலுள்ள செங்கல் சூளைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, செங்கல் உற்பத்தி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து பெய்து வரும் காற்றுடன் கூடிய மழை காரணமாக, இப்பிரதேசத்திலுள்ள நெல்வயல்கள் நீரில் மூழ்கி அழிவடைந்து வருவதோடு, அறுவடையும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
7 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
44 minute ago