Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 பெப்ரவரி 08 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் இலட்சக்கணக்கான ஏக்கர் நெல் வயல்கள் சேதமடைந்துள்ளன. இதனால் நாட்டில் அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், நெல் சந்தைப்படுத்தும் சபை கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்தியிருந்த ஒரு தொகுதி நெல்லினை தனியார் அரிசி ஆலைகளுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட ஆரம்பித்துள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் அமைந்துள்ள நெல் சந்தைப்படுத்தும் சபைக்குச் சொந்தமான களஞ்சியசாலையில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த 12 இலட்சத்து 50 ஆயிரம் கிலோகிராம் நெல்லினை - தனியார் அரிசி ஆலைகளுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகியது.
நெற்சந்தைப்படுத்தும் சபையினர் 2009/2010 ஆம் ஆண்டு பெரும்போகத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்து வைத்திருந்த நெல்லினையே இவ்வாறு விற்பனை செய்வதாக மேற்படி களஞ்சியசாலைக்குப் பொறுப்பான அதிகாரி தெரிவித்தார்.
தற்போதைய வெள்ளம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் 1 இலட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் நெல் வயல்கள் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago