Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 பெப்ரவரி 09 , பி.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களுக்கிடையில் ஒற்றுமையில்லாமையால் மாநகர சபையின் நிதி குழுவை தெரிவு செய்வதற்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிதிக்குழு இன்று நியமிக்கப்படாமையால் மாநகர ஊழியர்களுக்கான சம்பளம் வழங்க முடியாத நிலை கல்முனை மாநகர சபை தள்ளப்பட்டுள்ளதாக மாநகர சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபையின் இன்றைய அமர்வின் போது 2011ஆம் அண்டுக்கான நிதிக்குழுவை தெரிவுசெய்வதற்கான வாக்கடுப்பு சபையில் இன்று புதன்கிழமை நடைபெற்றது.
நிதிக்குழுவிற்கு மேயர் உட்பட ஆறு அங்கத்தவர்கள் சட்டப்படி தெரிவுசெய்யப்பட வேண்டும். இதில் மேயர் தவிர்ந்த ஏனைய ஐந்து உறுப்பினர்களும் வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்படுவார்கள்.
இதற்காக இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் அதிக வாக்குகளைப் பெற்று நான்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
ஜந்தாவது உறுப்பினர் தெரிவிற்கு போட்டியிட்ட ஐந்து உறுப்பினர்களுக்கும் சமமான வாக்கு கிடைத்தமையால் அதில் யாரைத் தெரிவு செய்வது என்ற பிரச்சினை எழுந்தது.
மேயருக்குள்ள அதிகாரத்தின் மூலம் அவர் ஐந்து பேரில் ஒருவருக்கு வாக்களிக்க முடியும்.
எனினும் ஐந்து பேருடைய பெயரையும் பகிரங்கமாக வாசிக்கப்பட்டமையால் மேயர் வாக்களிக்க மறுத்துவிட்டார்.
இதனால் மீள்தேர்தல் நடத்துமாறு மேயரினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை எதிர்க்கட்சித்தலைவர் ஹென்றி மஹேந்திரன் நிராகரித்தார்.
இந்த நிலையில் சமமான வாக்குகளை பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிஇ இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றின் உறுப்பினர்கள் தேர்தலிலிருந்து விலகுவதாக கூறினார்கள்.
எனினும் சமனான வாக்குகளை பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இரு உறுப்பினர்களுகிடையில் ஒற்றுமை ஏற்படாமையால் நிதி குழு அமைக்க முடியாமல் போனது.
2011ஆம் ஆண்டுக்கான நிதிக்குழுவிற்கான தேர்தலை இன்னுமொரு அமர்வில் நடத்துவது என தெரிவித்து இன்றைய அமர்வை மேயர் நிறைவு செய்தார்.
1 hours ago
2 hours ago
Nafar Thursday, 10 February 2011 03:27 PM
சின்ன விடயம் இது நாணயத்தை சுண்டி பூவா , தலையா என்று பார்ப்பதுதானே சர்வேதேச கிரிக்கெட் இல் கூட இதை தானே பார்கிறார்கள். என்னபா இந்த ஐடியா கூட தெரியாமல் இருக்கிறது
Reply : 0 0
ramlan Thursday, 10 February 2011 03:56 PM
இவர்கள் எப்போதுதான் ஒன்று பட்டிருக்கிறார்கள்?
Reply : 0 0
kan Saturday, 12 February 2011 03:43 AM
தேர்தல் முறை தெரியாதவர்கள் எப்படி தேர்தலில் போட்டிட்டு மாநகர சபைக்கு வந்தார்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago