2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

மனிதவலுவுடன் நெல் அறுவடை ஆரம்பம்

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 14 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அம்பாறை மாவட்டத்தில் இயந்திரங்களால் நெல் அறுவடை செய்வதற்கு அதிக பணம் அறவிடப்படுவதனாலும், உரிய நேரத்தில் அறுவடை இயந்திரங்களைப் பெற்றுக் கொள்வதில் சிரமங்கள் உள்ளதனாலும், விவசாயிகள் - வெள்ளத்தினால் பாதிப்படைந்த தமது நெல்வயல்களை மனித வலுவினைக் கொண்டு அறுவடை செய்து வருகின்றனர்.

ஏக்கரொன்றை பட்டி இயந்திரத்தினால் அறுவடை செய்வதற்கு 08 ஆயிரம் ரூபாவும், டயர் இயந்திரத்தினால் அறுவடை செய்வதற்கு 04 ஆயிரம் ரூபாவும் அறவிடப்படுகிறது. இதேவேளை, பலரும் ஒரேநேரத்தில் அறுவடையினை மேற்கொண்டு வருவதனால், விவசாயிகள் தமது நெல் வயல்களை உரிய வேளைகளில் அறுவடை செய்வதற்கு – அறுவடை இயந்திரங்களைப் பெற்றுக் கொள்வதிலும் கடுமையான சிரமத்தினை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதனால், தமது நெல்வயல்களை தற்போது மனித வலுவினைக் கொண்டு அறுவடை செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேற்படி நிலையால், அறுவடை இயந்திரத்தின் வருகைக்குப் பின்னர் கடந்த பல வருடங்களாக தொழிலற்றுப் போயிருந்த அறுவடைத் தொழிலாளர்களுக்கு தொழில் கிட்டியுள்ளது.

எவ்வாறிருந்த போதும் நெல்லின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்தே காணப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

சம்பா ஒரு மூட்டை 1,400 ரூபாவுக்கும், நீட்டு ஒரு மூட்டை 1,100 ரூபாவுக்கும் உச்சபட்சமாகக் கொள்வனவு செய்யப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .