2025 ஜூன் 09, திங்கட்கிழமை

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் நடமாடும் சேவை

Super User   / 2011 ஏப்ரல் 23 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் மக்கள் தொடர்பாடல் பிரிவு ஏற்பாடு செய்திருந்த பொலிஸ் நடமாடும் சேவையொன்று ஒலுவில் அல் ஹம்றா வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்றது.

அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்குட்பட்ட மக்கள் நன்மை பெறும் வகையில் நடத்தப்பட்ட இந் நடமாடும் சேவையில், பல துறையினரும் இணைந்து பணியாற்றினர்.

ஆயர்வேத வைத்திய சேவை, மலேரியா மற்றும் நீரிழிவு நோய்க்கான இரத்தப் பரிசோதனை, இலவச மூக்குக் கண்ணாடிப் பரிசோதனை, இணக்க சபை, தொலைந்த ஆவணங்களுக்கான பொலிஸ் முறைப்பாடுகளை வழங்குதல், பெண்கள், அக்கரைப்பற்று மனித உரிமைகள் இல்லத்தின் சிறுவர் மற்றும் வீட்டு வன்முறை தொடர்பிலான சட்ட ஆலோசனை, பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவு ஆவணங்கள் தொடர்பிலான பிரச்சினைகளுக்குரிய தீர்வு ஆகிய சேவைகள் மேற்படி பொலிஸ் நடமாடும் சேவையின் போது வழங்கப்பட்டன.  

அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை, திராய்க்கேணி உள்ளிட்ட அட்டாளைச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த பல பகுதிகளிலிருந்தும் மக்கள் வருகை தந்து – இந் நடமாடும் சேபையில் தமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொண்டனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .