Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஏப்ரல் 28 , பி.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
இலங்கையின் பல பகுதிகளையும் சேர்ந்த பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்களுக்கு புதிய தொழிநுட்பத்தினூடாக கற்கை நெறிகளுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று மாலை சாய்ந்தமருது பிரதான வீதியில் அமைந்துள்ள சி.ஐ.எம்.எஸ்.கெம்பஸ் கூட்டத்தில் இடம்பெற்றது.
சி.ஐ.எம்.எஸ்.கெம்பஸின் பணிப்பாளர் நாயகம் அன்வர் எம்.முஸ்த்தபா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக யூ.எஸ்.எய்ட் நிறுவன பிரதி பிரதம தரப்புக்களின் தலைவர் பிரதிப் லியனமானவும் கொளரவ அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயளாலர் ஏ.எல்.எம்.சலீமும் கலந்துகொண்டனர்.
அத்துடன், விஷேட அதிதிகளாக யூ.எஸ்.எய்ட் நிறுவனத்தின் தொழில்படை அபிவிருத்தி முகாமையாளர் நேசராஸா தம்பிராஸ், தென் கிழக்குப்பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி அனூசியா சேனாதிராசா, தென்கிழக்கு பல்கலைக்கழ விரிவுரையார் ஏ.ஆர்.எம்.அன்ஸார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிராந்திய பொருளாதார இணைப்புத்திட்டத்தின் கீழ் இளைஞர் யுவதிகளின் தேவைகளை அடையாளம் கண்டு அதன் மூலம் பயிற்சி வழங்கப்பட்டு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிறந்த தொழில் வாய்ப்பினை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
திருகோணமலை, அப்பாறை, மொனராக்கலை, நுவரெலியா மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த மூவின இளைஞர் யுவதிகளும் இன்றைய நிகழ்வில் புலமைப்பரிசீல்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
24 minute ago
40 minute ago
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
40 minute ago
45 minute ago
2 hours ago