Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஒக்டோபர் 29 , பி.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.ஜே.எம். ஹனீபா)
சர்வதேச லயன்ஸ் கழகத்தின் 306-சீ-2 கல்முனை நகர லயன்ஸ் கழக ஏற்பாட்டில் கழகத்தின் சாதனையாளர்கள் கௌரவிப்பு, உறுப்பினர்களுக்கான சின்னம் சூட்டல், உறுப்பினர்களின் புலமைப்பரிசில் சித்தியடைந்த பிள்ளைகளை கௌரவித்தல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை கல்முனையில் நடைபெற்றது.
கல்முனை நகர தலைவர் லயன் கே.பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவின் பிரதம அதிதியாக மாவட்ட ஆளுநர் சபையின் பிரதிச்செயலாளரும், பிராந்திய தலைவருமான பொறியியலாளர் லயன் என்.பி.ரஞ்சன், கௌரவ அதிதிகளாக அட்டாளைசேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.ஏ.எம்.நஸீர், லயன்ஸ் கழக மாவட்ட ஆளுநர் சபையின் பிரதிப் பொருளாளர் லயன் சிவகுரு சண்முகநாதன், வலயத் தலைவர் லயன் எஸ்.தைரியராஜ், கல்முனை நகர லயன்ஸ் கழக செயலாளர் லயன் எஸ்.சிறிரங்கன் பொருளாளர் லயன் எஸ்.நந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Goerge Monday, 31 October 2011 03:21 AM
Lion இவர்களுக்கு உரிய சொத்தாகிடுதுப்பா!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
1 hours ago
2 hours ago