Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2011 நவம்பர் 11 , மு.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.ஜே.எம்.ஹனீபா)
சம்மாந்துறை பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட அலிவன்னியர் வீதியானது சியா சந்தியிலிருந்து வீரமுனை சந்திவரைக்கும் புனரமைப்பின்றி காணப்படுவதால் போக்குவரத்து செய்வதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
பள்ளிவாசல், பாடசாலை, மையவாடி என்பன அமையப்பெற்றுள்ள இவ்வீதியில் இறந்தவர்களின் உடல்களை மையவாடிக்கு எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இவ்வீதியில் அதிகமான விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் அம்மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இப்பிரதேசத்தை ஊடறுத்து செல்லும் இப்பிரதான வீதியானது சம்மாந்துறை பிரதேசத்தினூடாக மண்டூர் பிரதேசத்துக்கு செல்லும் ஒரு பிரதான பாதை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இப்பாதையை புனரமைத்துத் தருமாறு கோரி சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு பலமுறை எடுத்துக் கூறியும் எந்தவித பயனும் இதுவரைக்கும் கிட்டவில்லை என பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
uooran Friday, 11 November 2011 08:22 PM
சம்மாந்துறை ஊரில் அலிவன்னியர் வீதி மட்டுமில்ல, நிறைய வீதிகள் பொலிவிழந்து விட்டன முன்னாள் அமைச்சருக்கு பிறகு எல்லாம் முடிஞ்சு போச்சு. அவருக்கு பிறகு அவர்ர மருமகன் ஏதாவது செய்வார் எனப் பார்த்தால் அதற்கு முன்பிருந்த மன்சூர் திறம். கல்முனைல தம்பிக்கிளி போல இங்க வெள்ளைக்கிளி
இவங்கள நம்பினா நகரங்கள் கிராமமாகிடும். கிராமங்கள் குக்கிரமமகிடும் !!!!!!!!!!!!!!
Reply : 0 0
porali Friday, 11 November 2011 09:00 PM
ஊரான், நான் உங்களுடைய கருத்துக்கு நூறு வீதம் ஆதரவு.......
Reply : 0 0
pasha Friday, 11 November 2011 09:50 PM
ஊரான் நன்றாக சொன்னீர்கள். நம்மட சனம் பண்டை கால குறு நிலமன்னர்களை உருவாக்குவது போல் ஒவ்வொரு ஊருக்கும் ஒருவரை உருவாக்கி உள்ளார்கள். அக்கரபத்துக்கு ஒருவர், சம்மாந்துறைக்கு ஒருவர் இப்போ சாய்ந்தமருதிலும் அந்த வியாதி வந்துள்ளது .
Reply : 0 0
meenavan Friday, 11 November 2011 10:24 PM
வீதி திருத்தப்படுமோ இல்லையோ? வீதி சம்பந்தமாக வழங்கப்படும் கமெண்ட்ஸ் (comments) ரசனையாக உள்ளது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
1 hours ago
2 hours ago