Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 06 , மு.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
அம்பாறை மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பிரதேசமான கொலணிப் பகுதியிலுள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கல்முனை மாநகரசபை உறுப்பினர் கே.எம்.முபீத் கேட்டறிந்துகொண்டுள்ளார்.
இந்த மக்கள் தினசரி எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளை அறிந்துகொள்வதற்காக மாநகரசபை உறுப்பினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை அம்பாறை மாவட்டத்தின் கொலணிப் பகுதிக்கு சென்றிருந்தார். அங்குள்ள மக்களை நேரடியாகச் சந்தித்து கலந்துரையாடிய இவர், அம்மக்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்துகொண்டார்.
காட்டு யானைகளின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மாநகரசபை உறுப்பினர் சந்தித்து கலந்துரையாடியதுடன், வெள்ள அனர்த்தத்தினால் சிதைவுற்று போக்குவரத்து செய்யமுடியாதுள்ள பாதையையும் ஆற்றுமண் நெற்பயிர்களை மூடி சேதப்படுத்தியுள்ளதனையும் மாநகரசபை உறுப்பினர் பார்வையிட்டார்.
இப்பிரச்சினைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்து இதற்கான தீர்வினை பெற்றுத் தருவதாகவும் அவர் உறுதியளித்தார்.
7 hours ago
7 hours ago
9 hours ago
hameed Monday, 06 February 2012 05:30 PM
ஐயோ ஐயோ ரம்சானுக்கு வேறே வேலையே இல்லேய ? அவர் ரிப் போனேதே செய்தியா போடுறாரு.
Reply : 0 0
***மல்லிகை சிராஜ்***siro Monday, 06 February 2012 05:57 PM
வாழ்த்துக்கள்
Reply : 0 0
senayuran Monday, 06 February 2012 07:06 PM
முபீத் கேட்டறிந்துவிட்டு போனால் அடுத்த தேர்தலுக்கு வராமல் உடனே மக்களின் குறைகளை தீர்க்க முடிவெடுங்கள். பல அரசியல் வாதிகள் சென்றகாலங்களிலும் வந்து பார்த்தார்கள் ஆன பலன் ஒன்றும் இல்ல. அதுபோல் இல்லாமல் நடந்துகொள்ளுங்கள்.
Reply : 0 0
maththiyamuham Monday, 06 February 2012 10:23 PM
கொலனி பிரதேசம் நாவிதன்வெளி பிரதேச சபை பிரிவில் உள்ளது. கல்முனை மாநகர சபை உறுப்பினர் முபீதால் எதுவும் செய்ய முடியாது அவருடைய நண்பருக்கு போடும் தமாஸ் கண்துடைப்பு
Reply : 0 0
Reesath Tuesday, 07 February 2012 12:44 AM
கல்முனையை சேர்ந்த ஒருவர் காணமல் போய் கொலை செய்யப்பட்டு கண்டெடுக்கபட்டதெல்லாம் இவகட செய்தில வரமட்டதோ?
Reply : 0 0
mi.samsudeen Tuesday, 07 February 2012 02:44 AM
அவர் அதாவது செய்வதற்கு மனம் வந்திருக்கு
Reply : 0 0
Aslam Tuesday, 07 February 2012 11:09 AM
பிரச்சினைகளை கேட்டறிந்ததோடு நில்லாது அதற்கான தீர்வினைப் பெற்றுக் கொடுங்கள். Mr Mufeeth அதனை முன்னின்று செய்வார் என நம்புகிறோம்.
Reply : 0 0
kiraama vaasiA Tuesday, 07 February 2012 11:27 AM
அட போங்கப்பா... இவங்கட கதைகள கேட்டு காது புளிச்சதுதான் மிச்சம். நானும் அம்பத்தி பத்து வருசமா இருக்கேன் ஒண்டும் நடந்த பாடில்ல.
Reply : 0 0
mi.samsudeen Tuesday, 07 February 2012 12:06 PM
முபீத் கல்முனை மாநகர சபையில் ஒரு சாதனை வீரன். அதனால் தான் இரண்டாம் தடவையும் அங்கு கால் வைத்திருக்கிறார் . முபீத் மக்களுக்கு செய்திருக்கும் உதவிகள் கருது தெரிவிக்கும் அன்பர்களுக்கு தெரியாது. நீங்கள் குண்டான் சட்டிக்குள் குதிரை ஒட்டுகின்றீர்கள் முபீத் மைதானத்துக்கு வந்திருக்கிறார். அதனால் தான் மக்கள் முன் மீண்டும் வந்தார், இன்னும் வருவார்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
9 hours ago