Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Kogilavani / 2012 மார்ச் 12 , மு.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
அக்கரைப்பற்று பனங்காட்டு பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் கனரக வாகனத்தில் பயணித்த ஒருவர் பலியானதுடன், 6 பேர் காயமடைந்துள்ளனர்.
அட்டாளைச்சேனை தர்கா நகரை பிறப்பிடமாகக் கொண்ட என்.முஜாத் (வயது 16) என்ற சிறுவனே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.
வேகக் கட்டுப்பாட்டை இழந்த கனரக வாகனமொன்று மின்கம்பத்தில்; மோதியே இவ்விபத்து சம்பவித்ததாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் 3 பேர் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய மூவரும் சிகிச்சை பெற்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இவ்விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago