2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

திவிநெகும தேசிய திட்டத்தின் கீழ் புதுவருட சந்தை

Kogilavani   / 2012 ஏப்ரல் 09 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


புதுவருட பிறப்பை முன்னிட்டு தம்பிலுவில் பொதுச் சந்தை வளாகத்தில் மூன்று நாட்களைக் கொண்ட புதுவருடச் சந்தையொன்று இடம்பெற்று வருகிறது.

திருக்கோவில் பிரதேச செயலகம் மற்றும் தம்பிலுவில் கமநலசேவை மத்திய நிலையம் ஆகிவற்றின் அனுசரணையுடன் இடம்பெற்று வரும் இச் சந்தையின் ஆரம்ப நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றன.

திருக்கோவில் பிரதேச செயலாளர் கலாநிதி எம். கோபாலரட்ணம் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எஸ். செல்வராஜா, கமநலசேவைகள் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட உதவி ஆணையாளர் என். சிவலிங்கம், தம்பிலுவில் கமநலசேவை மத்திய நிலைய பெரும்போக உத்தியோகத்தர் எம். சிதம்பரநாதன், கமநலசேவை சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ஏ.வி. மௌலானா மற்றும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேனவின் இணைப்பாளர் எம்.ஐ.எம். றியாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேற்படி புதுவருட சந்தையில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் பொருட் கொள்வனவில் ஈடுபட்டனர்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் திவிநெகும தேசிய திட்டத்தின் கீழ் மேற்படி புதுவருடச் சந்தை இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வின் போது, கமநல வங்கிக்கு புதிய அங்கத்தவர்களை இணைக்கும் நடவடிக்கைகளும் இடம்பெற்றன.

இதேவேளை, மேற்படி நிகழ்வுகளின் நினைவாக திருக்கோவில் கமநல மத்திய நிலையத்தில் தென்னங்கன்றுகள் நடப்பட்டன.








  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .