2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

அமைச்சர் ஹக்கீமின் அக்கரைப்பற்று விஜயத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Super User   / 2012 ஓகஸ்ட் 14 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா, அப்துல் அஸீஸ்)


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்றறு நகரில் நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்ற இப்தார் நிகழ்வு மற்றும் தேர்தல் பிரச்சார கூட்டம் ஆகியவற்றிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

குறித்த இப்தார் நிகழ்வில் நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் கலந்துகொள்வதற்கு எதிராகவே அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தினால் அக்கரைப்பற்றில் கலகம் அடக்கும்; பொலிஸார் மற்றும் இரானுவத்தினர் குவிக்கப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மத்தியில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்றமையால், அமைச்சர் ஹக்கீமின் அக்கரைப்பற்றுக்கான விஜயம் இரத்து செய்யப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்களின் இப்தார் நிகழ்வினை வீதிகளில் நின்றவாரே நிறைவேற்றினர். சம்பவ இடத்துக்கு வருகை தந்த திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம், வேட்பாளாகள் மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோர் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரேமலால் றணகலவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.














  Comments - 0

  • sabeer mohammed Tuesday, 14 August 2012 08:44 AM

    ஏன் மாற்றுக் கட்சிக்காரர்கள் கூட்டம் நடத்துவதை தடுக்கவேண்டும்? இது நாகரியமான செயல் அல்ல? உங்களை நமது முஸ்லீம் சமூகத்துக்கு தலைவர் என்று கூறுவதா? தலைவலி என்று கூறுவதா? இந்த புனிமாதத்தின் தன்மையை கெடுக்கவேண்டும்.மொத்த முஸ்லீம் மக்களின் வெறுப்பை சம்பாதிக்க வேண்டாம்.

    Reply : 0       0

    Mulla Wednesday, 15 August 2012 05:53 AM

    தேர்தல் வந்தால் மட்டும்தான் கிழக்கிலும் முஸ்லிம்கள் இருப்பது ஸ்ரீ. மு. கா. தலைவருக்கு தெரியவருவது அபூர்வம். தேர்தல்கால நோன்புகள் மட்டும்தான் ஸ்ரீ.மு.கா திறக்க ஏற்பாடு செய்வதும் அபூர்வம். புனிதமாதத்தின் மகிமையை தேர்தல்தான் உணர்த்துமா?

    Reply : 0       0

    Maattrem Thursday, 16 August 2012 12:42 AM

    வேறு நாட்களில் சாதானமாக அக்கரைபற்றுக்கு போய் வரும் ஹக்கீம் நோன்பு திறக்க வருவதென்றால் மாத்திரம் அதாஉல்லஹ்வுக்கு காய்ச்சல் பிடிப்பது ஏன்?

    Reply : 0       0

    Mohamed Abdulla Saturday, 18 August 2012 01:54 AM

    இந்த அநாகரிமான செயலை செய்த அல்லது செய்ய வைத்த அரசியல் காடைத்தனம் அடைக்கப்பட வேண்டும்.

    Reply : 0       0

    roshaen Monday, 20 August 2012 12:43 AM

    இருவரும் தவறு இழைத்து விட்டார்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X