2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

அக்கரைப்பற்றில் முஸ்லிம் காங்கிரஸ் மாவட்ட காரியாலயம் மீது தாக்குதல்

A.P.Mathan   / 2012 செப்டெம்பர் 01 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


அக்கரைப்பற்றில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மாவட்டக் காரியாலயம் மீது நேற்று வெள்ளிக்கிழமை பகல் கும்பலொன்றினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக காரியாலயப் பொறுப்பாளரும், மு.காங்கிரஸின் அக்கரைப்பற்று மத்திய குழுவின் உப தலைவருமான ஏ.எல்.மர்ஜுன் தெரிவித்தார்.

15 பேர் அடங்கிய குழுவினரே இவ்வாறு தமது காரியாலயம் மீது கற்கள் மற்றும் கண்ணாடிப் போத்தல்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக காரியாலயப் பொருப்பாளர் மர்ஜுன் இதன்போது கூறினார்.

இத்தாக்குதலில், அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வேட்பாளர்களின் பெறுமதிமிக்க பதாதைகள் சேதமாக்கப்பட்டதாகத் தெரியவருகிறது.

இத் தாக்குதல் குறித்து, அக்கரைப்பற்று பொலிஸாரிடம் முறைப்பாடொன்றினை தான் பதிவு செய்துள்ளதாகவும், தாக்குதலில் ஈடுபட்டோரில் 05 இற்கும் மேற்பட்டோரின் பெயர் விபரங்களை முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாகவும் காரியாலயப் பொறுப்பாளர் மர்ஜுன் மேலும் கூறினார். 



  Comments - 0

  • rima Saturday, 01 September 2012 08:05 AM

    அவர்களுக்கு தெரியும் இந்த முறை மண் கவ்வப் போகிறோம் என்று.

    Reply : 0       0

    athavann Saturday, 01 September 2012 03:09 PM

    என்ன பொய்

    Reply : 0       0

    #rara Saturday, 01 September 2012 05:03 PM

    தோல்வி உறுதி

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X