2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

அக்கரைப்பற்றில் அடாவடித்தனங்களுக்கு முடிவு காலம் வந்துவிட்டது: அமைச்சர் ஹக்கீம்

Super User   / 2012 செப்டெம்பர் 02 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


அக்கரைப்பற்றில் அட்டகாசங்கள் மற்றும் அடாவடித்தனங்கள் முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று சனிக்கிழமை மாலை அக்கரைப்பற்று பிரதான வீதியிலுள்ள தொழிநுட்ப கல்லுரிக்கு அருகாமையிலுள்ள பண்டைம் முற்றவெளியில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"பொலிஸ்மாஅதிபர் மற்றும் தேர்தல் ஆணையாளர் ஆகியோர் தத்தமது கடமையை சிறப்பாக நிறைவேற்றி வருவதாக தான் நம்புகின்றேன். இதனால் இங்குள்ள அமைச்சரின் அடாவடித்தனங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் பொலிஸ் அதிகாரி ரணகலவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டவுள்ளது.

இதனால், அவரின் சீருடை கழற்றப்படுவதற்கு உரிய காலம் வந்துவிட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்றில் வெற்றிகரமாக அமைவதற்கான எதிர்காலம் வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளது. இதுவரை இடம்பெற்று வந்த பாரிய தேர்தல் மோசடிகளுக்கும் முடிவு கட்டப்படும்" என்றார்.

அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் மௌலவி எஸ்.எல்.எம்;. ஹனிபா (மதனி) தலைமையில் வேட்பாளர்களான அக்கரைப்பற்று முன்னாள் பிரதேச சபை தவிசார் ஏ.எல்.தவம், நஸார் ஹாஜி, எம.என்.எம். நபீல் ஆகியோரைஆதரித்து நடாத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் அமைச்சர் ஹக்கீமின் கலந்துகொண்டதை பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.



  Comments - 0

  • Mohamed Sunday, 02 September 2012 10:29 AM

    எதிர்கால எமது குழந்தைகளை வளர்த்தெடுக்கும் சூழலுக்கு எந்த ஒரு அடாவடித்தனத்தையும் எவரும் ஒரு முன்மாதிரியாக காட்டமுட்பட கூடாது.

    Reply : 0       0

    Abu Marwan` Sunday, 02 September 2012 11:46 AM

    தலைவர்கள்...இப்படி பேச்சக்கூடாது. "Great minds discuss ideas. Average minds discuss events. Small minds discuss people.

    Reply : 0       0

    faiz Sunday, 02 September 2012 12:37 PM

    தலைவா உன் பிரச்சாரம் தொடரட்டும்

    Reply : 0       0

    aysha Sunday, 02 September 2012 05:35 PM

    நல்ல காலம் தலைவர் தப்பித்தார்.

    Reply : 0       0

    Jsu Monday, 03 September 2012 07:11 AM

    இந்த முறை ஏற்பட்டுள்ள அரிய சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி அம்பாரை மற்றும் திருகோண மாவட்டங்களுக்கு முஸ்லிம் அரச அதிபர்களை நியமிக்க முயற்சி செய்யுங்கள். குறைந்தது புது மாவட்டத்தை உருவாக்கியாவது இதனை நிறைவேற்றினால் அடாவடித்தனங்கள் செய்வோரை இளையவா்கள் பார்த்துக்கொள்வார்கள்.

    Reply : 0       0

    Haniff Tuesday, 04 September 2012 10:07 AM

    வை திஸ் கொலவெறி... சமுதாயத்திற்காகவா அல்லது சுயநலத்திற்காகவா...?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X