2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

கட்சி மாறமாட்டோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் சத்திய பிரமாணம்

Super User   / 2012 செப்டெம்பர் 01 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான் )


கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாம் வெற்றி பெற்றால் கட்சியை விட்டு விலகப்போவதில்லை என 'பைஅயத்' (சத்தியம்) செய்யும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது, சுகாதார மத்திய நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது  ஸ்ரீலங்கா முஸ்லிம்  காங்கிரஸிக்கு ஆதரவான உலமாக்கள் முன்னிலையில் இந்த 'பைஅயத்' நிகழ்வு இடம்பெற்றது.

மௌலவி எஸ்.எச். ஆதம்பாவாவின் தலையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  மௌலவிமார்களான பாலமுனை ஹாஷிம், எம். பைசல், அபூஉபைதா உட்பட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், செயலாளர் ஹஸன் அலி, நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரிஸ், பைஸால் காசிம் மற்றும் கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இங்கு உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்,

"நாங்கள் இன்று ஏற்பாடு செய்துள்ள பைஅத் நிகழ்வு இலங்கை அரசியலில் சிறந்த முன்னுதாரணமாகும். இன்றுள்ள அரசியல் சூழ்நிலையில் சமூகத்தின் இருப்பையும் பாதுகாப்பையும் தக்க வைத்துக் கொள்வதற்கு இதன் மூலம் வழி காணப்படுகின்றது.

நான் இவ்வாறான நிகழ்வில் அவசியத்தை உணர்ந்து அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள முன்னரே, சங்கைக்குரிய உலமாக்கள் முன்வந்து இதனை ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக அவர்களுக்கு எனது நன்றிகள்" என்றார்.

அம்பாறை மாவட்டத்தின் 17 வேட்பாளர்களில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இரண்டு பேரை தவிர   15 வேட்பாளர்களும் உலமாக்கள் முன்னிலையில் தலைவரின் கையை பிடித்து சத்தியம் செய்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பங்குபற்றிய உலமாக்கள், எதுவித அமைப்புக்களையும் பிரதிநிதித்துவம் செய்யாமல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள் மட்டுமே என மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவா இங்கு சுட்டிக்காட்டினார்.

குறித்த பையத் படிவத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள்,

............................................................. சேர்ந்த ............................................................. ஆகிய நான் அல்லாஹ்வின் பேரருளால் எதிர்வரும் 08-09-2012 இல் நடைபெறும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளராக  ............................................... மாவட்டத்தில் போட்டியிடுகிறேன்.

அல்லாஹ்வின் அருளாலும் மக்களின் செல்வாக்கும் நிறைவாகப் பெற்று இத்தேர்தலில் வெற்றிபெற வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்திக்கிறேன்.

இத்தேர்தலில் வெற்றி பெறுமிடத்து, மாகாண சபைக்குள்ளும் வெளியிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் அதன் தலைவர் சகோ. ரவூப் ஹகீம் அவர்களின் தலைமைத்துவத்துக்கும் மிகவும் விசுவாசமாக நடந்துகொள்வேன் என்றும் எக்காரணம் கொண்டும் எந்த நிலையிலும் இக்கட்சியை விட்டு விலகவோ கட்சியின் கட்டுப்பாட்டை மீறவோ துரோகமிளைக்கவோ மாட்டேன் என்றும் பணத்துக்கோ, பதவிகளுக்கோ ஆசைப்பட்டு கட்சியையும்இ தலைமைத்துவத்தையும் காட்டிக் கொடுக்கமாட்டேன் என்றும் எனது சொந்த நலனை விட கட்சியினதும் சமூகத்தினதும் நன்மையையே முதன்மைப் படுத்துவேன் என்றும் எனது முன்னிலையிலுள்ள உலமாக்கள் சாட்சியாக சத்தியம் செய்கிறேன். எனது கூற்றுக்கு அல்லாஹ்வும் சாட்சியாக இருக்கிறான்.

சத்தியம் தவறாத

.......................................





  Comments - 0

  • aj Sunday, 02 September 2012 10:58 AM

    ஹ ஹ ஹ ஹ

    Reply : 0       0

    sakkeer Sunday, 02 September 2012 11:54 AM

    இது நல்லா இருக்கா??????

    Reply : 0       0

    Haniff Monday, 03 September 2012 10:28 AM

    சூசூப்ப்ப்பர்ர் ஐடியா,

    Reply : 0       0

    கிழக்கான் Monday, 03 September 2012 03:26 PM

    ஐயோ.. முடியலப்பா... என்னால...
    பாராளுமன்ற தேர்தல் வந்தா தெரியும். இந்த அண்ணன் தம்பி விளையாட்டு..

    Reply : 0       0

    mohamed Tuesday, 04 September 2012 08:14 PM

    பள்ளி தலைவர்கள் கட்சி தலைவர்களானல் பள்ளியின் நிலமை என்ன?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X