2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

கடலில் காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 27 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)


அம்பாறை, கல்முனை துறையிலிருந்து ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்காகச் சென்ற  மீனவர் ஒருவர் கடலில் காணாமல் போன நிலையில் அவரது சடலம் இன்று வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருதைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான (வயது 52) எம்.ஐ.லத்தீப் என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

கல்முனை துறையிலிருந்து கடந்த 23ஆம் திகதி இரவு மீன்பிடிப்பதற்காகச் சென்ற இம்மீனவர், கடலில் ஏற்பட்ட சீற்றம் காரணமாக படகில் இருந்து கடலில் தவறி வீழ்ந்து காணாமல் போயுள்ளார்.

5 நாட்களின் பின்னர் இவரது சடலம் நிந்தவூர் கடற்கரையில் ஒதுங்கியதை அடுத்து  அங்குள்ள மீனவர்கள், கல்முனை மீனவர்களுக்கு தெரியப்படுத்திய பின் சடலம் மீட்கப்பட்டது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X