2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

நாம் பாதுகாப்பாக இருப்போம் தொனிப்பொருளில் மீள்பயிற்சிபாசறை

Kogilavani   / 2012 ஒக்டோபர் 10 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

'நாம் பாதுகாப்பாக இருப்போம்' எனும் தொனிப் பொருளில் தெரிவு செய்யப்பட்ட 10 பாடசாலைகளின் 57ஆசிரியர்களுக்கு ஒரு நாள் மீள்பயிற்சிப்பாசறை நேற்று செவ்வாய்கிழமை கல்முனை கிறிஸ்ட்டா மண்டபத்தில் இடம்பெற்றது.

கனடியன் றெட் குரோஸின் அனுசரணையில் கல்வியமைச்சு நடைமுறைப்படுத்தும் இத்திட்டத்திற்கு வளவாளர்களாக கனடியன் றெட் குரோஸின் தணலட்சுமி றொபின்ஸன், ஜெகன் பிரகாஸ் மற்றம் கல்முனை கல்வி வலயத்தின் ஆலோசனையும் வழிகாட்டலுக்குப் பொருப்பான ஆசிரிய ஆலோசகர் எஸ்.பரமலிங்கம், தொழில் வழிகாட்டல் ஆலோசகர் உத்தியோகத்தர் ஏ.பி.அப்துல் ஜவ்பர் ஆகியோர் கலந்து கொண்டு செயறபாடுகளை மேற்கொண்டனர்.

இந்நிகழ்விற்கு கல்முனை கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜெலீல், கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம்  ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்கள்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X