2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

தேசிய காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர்களுக்கு வரவேற்பு

Super User   / 2012 ஒக்டோபர் 10 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் தேசிய காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களில் இடம்பெறவுள்ளது.

இதன் முதலாவது வரவேற்பு நிகழ்வும் பொதுக்கூட்டமும் எதிர்வரும் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்றில் இடம்பெறவுள்ளது.

இதனையடுத்து 13ஆம் திகதி சனிக்கிழமை அட்டாளைச்சேனையிலும், 14ஆம் திகதி ஞாயிற்று;ககிழமை நிந்தவூரிலும் வரவேற்பு நிகழ்வும் பொதுக்கூட்டமும் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வுகளில் தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா
அக்கரைப்பற்று மேயர் சக்கி அதாஉல்லா, பிரதேச அரசியல் தலைவர்கள், உலமாக்கள் மற்றும் புத்திஜீவிகள் என பலர் இந்நிகழ்வில் கலந்துசிறப்பிக்கவுள்ளனர்.

தேசிய காங்கிரஸ் சார்பாக கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் மற்றும் எம்.எல்.ஏ.அமீர் ஆகியோர் கிழக்கு மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • IBNUABOO Wednesday, 10 October 2012 11:09 AM

    தேசிய காங்கிரஸை வீழ்த்த கனவு கண்டவர்களுக்கு நல்ல பாடம் புகட்டிய கிழக்கு மாகாணசபை தேர்தலில் வெற்றிபெற்ற அமைச்சர் உதுமாலெப்பை உட்பட மற்றவர்களுக்கும் வாழ்துக்கள். அமைச்சர் அதாஉல்லாவை யார் என்ரறு புரிந்திருப்பார்கள் அவரை எதிர்தவர்கள்.

    Reply : 0       0

    rima Wednesday, 10 October 2012 06:21 PM

    ஏன் இரண்டு நாக்கு உல்ல ரவுப் ஹக்கீம் வரமாட்டாரா? அவரையும் கூப்பிட வேண்டும் அவரும் முஸ்லிம்தான்.

    Reply : 0       0

    Mulla Thursday, 11 October 2012 10:38 AM

    எல்லாப்புகழும் இறைவனுக்கே...!

    Reply : 0       0

    Mulla Thursday, 11 October 2012 10:40 AM

    அவர் தேர்தல் காலத்தில் நோன்பு திறக்க மட்டும்தான் வருவார்... தேர்தல் முடிந்தால் அவருக்கு கிழக்கில் வேலையில்லை..!

    Reply : 0       0

    meenavan Thursday, 11 October 2012 04:46 PM

    சம்மாந்துறையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட உறுப்பினருக்கு சம்மாந்துறையில் வரவேற்ப்பு இல்லையா......?

    Reply : 0       0

    kiyas Thursday, 11 October 2012 04:51 PM

    இவர்களுக்கு ஒன்றும் இல்லை என்றால் வரவேற்பு நிகழ்வு சொந்த ஊரில் என்ன நடந்தது என்று யாவரும் அரிந்த விடயம்...ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை....

    Reply : 0       0

    சிறாஜ் Friday, 12 October 2012 06:31 PM

    இவர்களுக்கு ஒரு தொகுதியா பாதி இல்ல கால் வாசியும் இல்லை பாவம் அங்க 100 இங்க 50 பின்னுக்கு 10 முன்னுக்கு 5 என்று பொறக்கி எடுத்த வாக்குகளில் வந்த இந்த முடக்குதிரைக்காறர்களுக்கு தொகுதியா வேண்டும் ஹி ஹி ஹி ஹி முடிந்தால் கனவில் காணச்சொல்லுங்கள் இது சவாலா சாக்கடை முஸ்லிம் காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றதை பார்த்து அதாஉல்லா நஞ்சு குடிக்கனும் அவருக்கு எங்க சூடு சொறன இருக்கு சரி இனிமேலாவது பார்ப்போம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X