2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

திவிநெகும தொடர்பில் விளக்கமளிப்பு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 05 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல் அஸீஸ்)


கல்முனைப் பிரதேசத்தின் சமுர்த்தி வலையமைப்பிலுள்ள அமைப்புக்களின்  நிர்வாகிகளுக்கு  திவிநெகும (வாழ்வின் எழுச்சி) தொடர்பாக  அறிவூட்டும்  கருத்தரங்கு கல்முனை கிறிஸ்டா  இல்ல  மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

கல்முனை பிரதேச செயலக  சமுர்த்திக்  தலைமைக் காரியாலய  முகாமையாளர்  எ.ஆர்.எம்.ஸாலிஹ் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில்   வளவாளர்களாக   சமுர்த்தி  அதிகாரசபையின்  வாழ்வாதார  நிகழ்சித் திட்டத்துக்கான  பணிப்பாளர்  எம்.நடேசராஜா, சமுர்த்தி மாவட்ட இணைப்பாளர்   ஐ.அலியார், சமுர்த்தி  முகாமையாளர்களான எ.சி.எ.நஜீம், கே.நேசராஜா,  யு.எல்.ரஹ்மதுல்லா உட்பட கள   உத்தியோகஸ்த்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது சமுர்த்தி மாவட்ட இணைப்பாளர்  ஐ.அலியாரின் சேவையை பாராட்டி நினைவுச்சின்னமும்  வழங்கப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X