2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

மாட்டிறைச்சிக் கடைகளை தொடர்பில் மாநகர சபையின் உறுப்பினர் கடிதம்

Super User   / 2013 ஒக்டோபர் 27 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர்

தனியார் கட்டிடங்களில் இயங்கும் மாட்டிறைச்சிக் கடைகளை குத்தகைக்கு வழங்குவதற்காக கேள்வி கோரப்படுவது சட்ட முரணானது என கல்முனை மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர் இஸட்.ஏ.எச்.றஹ்மான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கல்முனை மாநகர ஆணையாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டப்பட்டுள்ளதாவது,

'கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கட்டிடங்களில் மாட்டிறைச்சிக்; கடைகளை நடாத்துவதற்கான கேள்வி கோரல் விண்ணப்பம் வருடா வருடம் கோரப்படுவது வழமையாகும். ஆனால் தனியார் கட்டிடங்களில் இயங்கும் மாட்டிறைச்சிக் கடைகளை குத்தகைக்கு வழங்குவதற்காக கேள்வி கோரப்படுவது சட்டத்திற்கு முரணாண விடையமாகும்.

தனியார் கட்டிடங்களில் இயங்கும் மாட்டிறைச்சிக் கடைகளை சட்டத்திற்கு  முரணணாக கேள்வி கோரப்படும்போது மாட்டிறைச்சிக் கடைகளை கடைக்காரர்கள் அதிக குத்தகைக்கு பணம் செலுத்தி பெற வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இதனால் இறைச்சிக் கடைக்காரர்கள் பாவனையாளர்களுக்கு இறைச்சியை அதிக விலைக்கு விற்க வேண்டிய நிலை எற்படுகின்றது.

இதனால் பாவனையாளர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனவே தனியார் கட்டிடங்களில் இயங்கும் மாட்டிறைச்சிக் கடைக்காரர்களுக்கு மாநகர சபையினால் வழங்கப்படும் வியாபார அனுமதிப் பத்திரத்துக்கான கட்டணம் மட்டுமே அறவிடப்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .