2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பிரதம நீதியரசர் அம்பாறைக்கு விஜயம்

Super User   / 2013 நவம்பர் 05 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் இன்று செவ்வாய்க்கிழமை அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

பொத்துவில் மற்றும் அக்கரைப்பற்று ஆகிய பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நீதிமன்றங்களை திறப்பதற்காவே அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளார்.இதன்போது, சுமார் இரண்டரைக் கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்றத்தின் புதிய கட்டடம் பிரதம நீதியரசரினால் திறந்துவைக்கப்பட்டது.

அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலக்ஸ்ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் பைசால் காசீம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0

  • VALLARASU.COM Tuesday, 05 November 2013 03:54 PM

    இந்த அரசாங்கத்தில் மு காவுக்கு இது ஒரு மைல் கல் என்றுதான் சொல்ல வேண்டும்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .