2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

வித்தியாரம்ப விழா

Kogilavani   / 2015 ஜனவரி 23 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.ஏ.தாஜகான்


பொத்துவில் உப வலயக்கல்வி அலுவலகத்தின் முதன்மைப் பாடசாலையான அல்- தாறுல் பலாஹ் வித்தியாலயத்தில் முதலாம் வருட மாணவர்களுக்கான ஏடு துவக்க வித்தியாரம்ப விழா வியாழக்கிழமை(22) வித்தியாலயத்தின் அதிபர் எம்.எல்.கலந்தர்லெவ்வை தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில், பொத்துவில் பிரதேச சபையின் உப தவிசாளர் ஏ.எம்.தாஜூதீன், ஆரம்ப பிரிவு ஆசிரிய ஆலோசகர் ஏ.எல்.இப்றாகீம், பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ்.முபாரக், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் ஏ.எம். றசீட் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


இதன்போது, இரண்டாம் வருட மாணவர்களால் முதலாம் வருட மாணவர்கள் வரவேற்கப்பட்டனர். ஏடு துவக்க நிகழ்வை உப தவிசாளர் ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X