Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 ஜனவரி 23 , மு.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.சுகிர்தகுமார்
அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் இந்து ஆலயங்களில் நடைபெற்று வரும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றம் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
மாமன்றத் தலைவர் வே.சந்திரசேகரம், செயலாளர் ஸ்ரீ மணிவண்ணன் ஆகியோர் இணைந்து விடுத்த அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய அரசின் நல்லாட்சி ஆரம்பாகியுள்ள இவ்வேளையில் இவ்வாறான துரதிஷ்ட சம்பவங்கள் நடைபெறுவது தவிர்க்கப்பட வேண்டும் எனவும் இச்சம்பவங்கள் மக்களிடையே கவலையை தோற்றுவித்துள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது.
அண்மைக்காலமாக திருக்கோவில், கல்முனை போன்ற பிரதேசங்களில் ஆலயங்களில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் கண்டறியப்படுவதற்குள் கடந்த 21ஆம் திகதி ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஒரே இரவில் நான்கு ஆலயங்களில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதுடன் மதஸ்தலங்ளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago